அக்கம் பக்கம் தெரியாமல்
பக்கம் பக்கமாய் கவியெழுதி
உனக்காய் பத்திரமாய்
வைத்தேன் என் தலையணைக்கடியில்
நீ பக்கத்தில் வந்தவுடன்
அத்தனையும் காட்டி
என் காதலை கதை கதையாய்
சொல்ல.......
ஆனால் ....
அக்கம் பக்கம் அறியாமல்
இரவிற்கும் தெரியாமல்
என் விழியிரண்டும் அழுதழுது
வடிந்த நீரில் அத்தனையும்
அழிந்த போது புரிந்தது எனக்கும்
பக்கத்தில் இல்லாத உனக்காய்
நான் பக்கம் பக்கமாய் எழுதியது
தப்பென்று.....................
No comments:
Post a Comment